லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் கமல் மகள் ஷ்ருதிஹாசன் இணைந்துள்ளார்.
அது குறித்து தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘முதல் நாள் - கூலி’ என்று ஷ்ருதி குறிப்பிட்டுள்ள அந்தப் பதிவு, இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
இப்படத்தில் ஷ்ருதியின் கதாபாத்திரம் குறித்து படக்குழு விரைவில் விவரங்களை வெளியிட உள்ளது.
இந்தப் படத்தில் ஷ்ருதி ஒரு பாடலைப் பாட இருப்பதாகக் கூறப்படுகிறது.