எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ‘பிரதர்’ படத்தின் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.
மொத்தம் 38 நொடிகள் மட்டுமே ஓடும் காணொளியைக் கண்ட ரசிகர்கள், இது குடும்பப் படமாக உருவாகும் என யூகித்துள்ளனர்.
காணொளிக்குக் கிடைத்துள்ள வரவேற்பு உற்சாகம் அளிப்பதாக பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் இணைந்துள்ளனர்.