சூர்யாவின் 44வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்.
கடந்த ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு திட்டமிட்டதற்கு முன்பாகவே முடிந்துவிட்டதாம். அடுத்தகட்ட படப்பிடிப்பை ஊட்டியில் தொடங்க உள்ளனர்.
ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியாக உள்ளது. இப்படத்தில் ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

