நகைச்சுவை வேடம் மீதான ஆசை அதிகரித்து வருகிறது: சாய் பல்லவி

1 mins read
a8089518-d6af-42e8-b751-2bce25ac835f
சாய் பல்லவி. - படம்: ஊடகம்

எந்த மொழியில் மாறுபட்ட நகைச்சுவை பாத்திரம் அமைந்தாலும் அதில் நடிக்கத் தயாராக உள்ளதாகக் கூறுகிறார் நடிகை சாய் பல்லவி.

நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகச் சொல்கிறார் சாய் பல்லவி.

ரசிகர்களின் ஆதரவைப் பெரும் படங்களில் பெரும்பாலானவை கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படைப்புகளாகவே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த வெற்றிப் படங்களை விஞ்சும் வகையில் நகைச்சுவைப் படங்களை உருவாக்க முடியும் என்றும் ரசிகர்களின் பாராட்டை பெற முடியும் என்றும் அண்மைய பேட்டியில் சாய் பல்லவி குறிப்பிட்டுள்ளார்.

“அதற்காக நகைச்சுவை படங்கள் மட்டுமே நல்ல படைப்புகள் என்று நான் குறிப்பிடவில்லை. நகைச்சுவை படங்களும் வசூல் ரீதியில் வெற்றி பெறும் என்பதையே வலியுறுத்துகிறேன்.

“எந்த மொழியில் மாறுபட்ட நகைச்சுவை பாத்திரம் அமைந்தாலும் அதில் நடிக்தயாராக உள்ளேன்,” என்கிறார் சாய் பல்லவி.

அண்மைக்காலமாக சாய் பல்லவிக்கு புதிய வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை என்று கூறப்படுவதை அவரது தரப்பு மறுக்கிறது.

கூடுமானவரை மாறுபட்ட கதைக்களம், கதாபாத்திரங்களில் மட்டுமே கவனம் செலுத்துவது என சாய்பல்லவி முடிவு செய்துள்ளதாகவும் அதற்காக சில பட வாய்ப்புகளை அவர் ஏற்கவிலை என்றும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்