சங்கர் இயக்கத்தில் உருவான ‘அந்நியன்’ திரைப்படம் விமர்சன, வசூல் ரீதியில் பெரும் வெற்றி கண்டது.
இந்நிலையில், அப்படத்தின் மறுபதிப்பை தற்போது வெளியிட இயலாது என சங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டு ‘அந்நியன்’ படம் வெளியானது. இந்நிலையில் ‘அந்நியன்’ மறுபதிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று சங்கர் கூறுயுள்ளார்.
“தொடக்கத்தில் ‘அந்நியன்’ இந்தி மறுபதிப்பு குறித்து திட்டமிட்டோம். ஆனால் அதைவிட பிரம்மாண்டமான படங்களை நான் இயக்க வேண்டும் என சில தயாரிப்பாளர்கள் விரும்பினர்.
“அதனால் ‘அந்நியன்’ மறுபதிப்பு நிறுத்தி வைகப்பட்டுள்ளது. ‘இந்தியன்-2’, ‘கேம் சேஞ்சர்’ படங்கள் வெளியீடு கண்டபின் ‘அந்நியன்’ மறுபதிப்பு குறித்து முடிவெடுப்போம் என்கிறார் சங்கர்.