இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் ஏறக்குறைய 115 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவற்றில் நான்கு மட்டுமே வசூலில் முன்னணி வகித்தன.
கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு அதிக படங்கள் வெளியாகியுள்ளன.
2024ல் அரையாண்டில் வெளியான படங்களில் ஏறக்குறைய 100 படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன.
இதன் மூலம் ஏற்பட்ட நட்டம் மட்டுமே 500 கோடி என்று தமிழக நாளேடான தினமலர் தகவல் வெளியிட்டுள்ளது.
ஓரளவு வசூலைக் குவித்த படங்களில் அரண்மனை 4, மகாராஜா நூறு கோடி வசூலைப் பெற்றுள்ளது. ‘அயலான்’, ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்கள் 75 கோடி வசூலை சம்பாதித்துள்ளன.
அதிக நாள்கள் ஓடிய படங்களில் அரண்மனை 4, லவ்வர், சைரன், வடக்குப்பட்டி ராமசாமி, அயலான், மிஷன் சாப்டர் 1, ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன், தூக்குதுரை, பிடி சார், இங்கு நான்தான் கிங்கு, ஸ்டார் ஆகியவை 25 நாள்களைக் கடந்து ஓடியிருக்கிறது.
ஜனவரி மாதத்தில் 16 படங்கள் வெளியாகின. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வசூலை அள்ளலாம் என்ற எண்ணத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’, தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்கள் வெளியிடப்பட்டன.
அயலான் படம் தாமதமாக வெளியானதால் ரூ. 75 கோடி வசூலித்ததாகத் தெரிகிறது. கேப்டன் மில்லர் திரைப்படம் தெளிவில்லாத திரைக்கதையாக இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அதுவும் ரூ.75 கோடியை சம்பாதித்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் இரண்டும் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை என்று கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படம் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ‘லால் சலாம்’. இந்தப் படம் பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
மார்ச்சில் 26 படங்கள் திரையீடு கண்டன. அவற்றில் கவுதம் மேனன் இயக்கத்தில் வந்த ‘ஜோஷ்வா’, ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘ரெபெல்’ ஆகிய இரண்டு படங்களும் தோல்வியைத் தழுவின.
ஏப்ரலில் 20 படங்கள் வெளிவந்தன. அதில் ஜீவி நடித்த கள்வன், டியர், விஜய் ஆன்டனி நடித்த ‘ரோமியோ’, விஷால் நடித்த ரத்னம் ஆகிய படங்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவை அனைத்தும் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
மே மாதத்தில் வெளியான அரண்மனை 4 மட்டும் யாரும் எதிர்பார்க்காத வெற்றியைப் பெற்றது. அது ரூ 100 கோடியை வசூலை அள்ளியது. மாதக் கடைசியில் வெளியான கருடன் ரூ.50 கோடியை வசூலித்தது லாபமடைந்தது.
ஜூன் மாதத்தில் 9 படங்கள் திரைகண்டன. அதில் மாதக் கடைசியில் ‘கல்கி 2898 ஏடி’ வெளியானது. விஜய் சேதுபதியின் மகாராஜா திருப்புமுனையாக ரூ.100 கோடி வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது.