இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி மலேசியாவில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
மீண்டும் உலக இசைச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் ஏ.ஆர்.ரகுமான். அதன் ஒரு அங்கமாக, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அவரது இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிலையில், தனது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பார்வையிட மலேசியா சென்றுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். அங்கு மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமை அவர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்து தாம் பெருமிதம் கொள்வதாக சமூக ஊடகத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
“இச்சந்திப்பின்போது இசை, கட்டடக்கலை, தொழில்நுட்பம் குறித்து இருவரும் உரையாடினோம்,” என்று ரகுமான் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில நாள்களுக்கு முன்பு ‘இந்தியன் 2’ படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க நடிகர் கமல்ஹாசனும் மலேசியப் பிரதமரை நேரில் சந்தித்துப் பேசி இருந்தார்.