‘மாநாடு’ படத்தின் வெற்றியை அடுத்து, நடிகர் சிம்பு நடித்து வரும் படங்கள் சிக்கலின்றித் தொடர்ந்து வெளியீடு கண்டு வருகின்றன.
இந்நிலையில், மலையாள இயக்குநர் ஜூட் ஜோசப் ஆண்டனி இயக்கத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகி உள்ளார்.
ஜூட் ஜோசப் இயக்கிய ‘2018’ என்ற மலையாளப்படம் வசூலில் சாதனை படைத்தது. இதையடுத்து விக்ரம் அல்லது விஜய் சேதுபதியை வைத்து அவர் தமிழ்ப்படம் ஒன்றை இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியானது.
இந்நிலையில், ஜூட் ஜோசப்பின் படத்தில் சிம்பு தான் ஒப்பந்தமாகி உள்ளாராம். சிம்புக்காக தனது கதையில் ஜூட் ஜோசப் சில மாற்றங்களைச் செய்துள்ளதாகத் தகவல்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் மலையாள நடிகர் மோகன்லால் ஒப்பந்தமாகி உள்ளதாகவும் வேல்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

