‘விடாமுயற்சி’ படத்துக்காக அஜர்பைஜான் நாட்டில் முகாமிட்டுள்ள நடிகர் அஜித்தை நேரில் சந்தித்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
இது குறித்து அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சந்திப்பு எதற்காக நடைபெற்றது என்பது தெரியவில்லை.
எனினும், தமது சமூக ஊடகப் பதிவில், “இது நடந்து விட்டது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு அவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தி இருக்கக்கூடும் என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.
அஜித்தை வைத்து ஏற்கெனவே ‘மங்காத்தா’ படத்தை இயக்கி உள்ளார் வெங்கட் பிரபு.

