விஷால் நடித்த திரைப்படம் பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகி உள்ளது.
‘மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷாலின் மதிப்பு திரை சந்தையில் அதிகரித்துள்ளது.
இதைப் பயன்படுத்தி விஷால் நடித்து முடங்கிக்கிடந்த ‘மத கஜ ராஜா’ படத்தை வெளியிட முயற்சி மேற்கொண்டுள்ளார் விஷால். கடந்த 2013ஆம் ஆண்டு சுந்தர்.சி இப்படத்தை இயக்கி இருந்தார்.
எனினும், பல்வேறு காரணங்களால் இப்படத்தை வெளியிட முடியவில்லை. இதில், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், தமிழக கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
அண்மையில் சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 4’ படம் வசூல் ரீதியில் சாதித்ததை அடுத்து, ‘மத கஜ ராஜா’ படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.