முகக்கவசத்துடன் வலம் வரும் ராஷ்மிகா

1 mins read
a1c14893-3a09-4488-b748-dea836c0c2fe
ராஷ்மிகா. - படம்: ஊடகம்

அண்மைக்காலமாக விமான நிலையங்கள் உட்பட அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் அணிந்து காணப்படுகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

வழக்கமாக பொது இடங்களில் ரசிகர்களைச் சந்திக்கும்போது சலித்துக்கொள்ளாமல் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது ராஷ்மிகாவின் வழக்கம்.

அப்படிப்பட்டவர், முகக்கவசத்துடன் காணப்படுவது ரசிகர்களைக் குழப்பிவிட்டது. இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ராஷ்மிகா.

“எனக்கு ஏதேனும் உடல் கோளாறு ஏற்பட்டுள்ளதா என்று சிலர் கேட்கின்றனர். அப்படியெல்லாம் எதுவுமில்லை. தொடர் படப்பிடிப்புகளால் சரும பாதிப்பு ஏற்படுகிறது.

“எனவேதான் படப்பிடிப்பு இல்லாத நாள்களிலாவது சருமத்துக்கு சற்று ஓய்வு கிடைக்கட்டும் என்று முகக்கவசம் அணிகிறேன்,” என்பதே ராஷ்மிகாவின் விளக்கம்.

குறிப்புச் சொற்கள்