இளையராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் தனுஷ் நாயகனாக நடிப்பது தெரிந்த செய்தி.
அருண் மாதேஷ்வரன் இயக்கும் படத்துக்கு ‘இளையராஜா’ என்றே தலைப்பு வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, கலை இயக்குநர் முத்துராஜ் ஆகிய இருவரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் இப்படம் வெளியீடு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷைப் பொறுத்தவரை இந்தப் படத்துக்காக வெகுவாக மெனக்கெடுகிறாராம். இளையராஜாவை திரையில் கச்சிதமாகப் பிரதிபலிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாம்.
இதற்கிடையே, இந்தப் படத்தில் மேலும் சிலர் விரைவில் இணைய உள்ளனர்.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.