‘35’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் நாயகியாக நடித்துள்ளார் நிவேதா தாமஸ்.
இதில் பாக்கியராஜ், கௌதமி ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படம் திரை காண்கிறது.
இந்நிலையில் படத்தின் வெளியீட்டுக்காக ஒரு மாதம் காத்திருப்பது இயலாத காரியம் என்று சமூக ஊடகப்பதிவில் நிவேதா குறிப்பிட்டுள்ளார்.
“இப்படத்தைப் பார்க்க சின்ன குழந்தையைப் போன்று ஆர்வமாக உள்ளேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘35’ படம் என் முகத்தில் சிரிப்பை வரவழைத்துள்ளது.
“என்னைப் பின்பற்றி ரசிகர்களும் இந்தப் படத்தை பார்த்து ஆதரிப்பீர்கள் என நம்புகிறேன்.
“இது எனது படம் என்று நான் பெருமையாகக் கூறுவேன். எனினும் ஒரு மாதத்திற்குப் பிறகு இது உங்கள் படமாக இருக்கும்,” என்று தமது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார் நிவேதா தாமஸ்.’