நடிகர் சூரியின் காட்டில் வாய்ப்பு மழை பொழிந்து கொண்டு இருக்கிறது.
‘கருடன்’ திரைப்படம் வசூல் ரீதியில் அசத்தியதுடன் நடிகர் சூரியின் நடிப்புக்கு பலத்த பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது.
அடுத்து இவர் நாயகனாக நடித்துள்ள ‘விடுதலை 2’, ‘கொட்டுக்காளி’ ஆகிய இரு படங்களும் வெளியீடு காண உள்ளன.
இந்நிலையில் ‘விலங்கு’ என்ற இணையத்தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் புதிய படத்திலும் சூரிதான் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம்.
இப்படத்தில் சூரி பிரபல கதாநாயகியுடன் இணைந்து நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.