சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி உருவாகிறது ‘நாற்கரப்போர்’. ஸ்ரீவெற்றி என்ற புதுமுகம் இயக்குகிறார்.
அபர்ணதி நாயகியாகவும் ‘சோத்துமான்’ அஸ்வின் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
“குப்பை அள்ளும் சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், சதுரங்க அரங்கில் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான், அதற்காக எத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை,” என்கிறார் இயக்குநர்.