தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் அம்மன் வேடம்

1 mins read
47fbab11-5b99-4c8f-bd8c-c27ae3fe6b89
‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி. - படம்: ஊடகம்

நடிகை நயன்தாரா மீண்டும் அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

அவர் ஏற்கெனவே அம்மன் வேடத்தில் நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

இதில் நயன்தாரா நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி இருந்தார். அவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், ‘மூக்குத்தி அம்மன்’ 2ஆம் பாகம் உருவாக இருப்பதாகவும் அதில் நயன்தாராவுக்குப் பதிலாக திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. எனினும், இருதரப்பும் இதை உறுதி செய்யவில்லை.

தற்போது ‘மூக்குத்தி அம்மன்’ இரண்டாம் பாகத்தில் நயன்தாரா ஒப்பந்தமாகி உள்ளதாக வேல்ஸ் பட நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்