‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வரும் டிசம்பர் 6ஆம் தேதி இந்தப்படம் வெளியீடு காண உள்ளது.
இந்நிலையில், ‘புஷ்பா தி ரூல்’ படம் திரை அரங்குகளில் திரை காணும் முன்பே ரூ.250 கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளது.
அண்மைய காலமாக திரை அரங்கங்களுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்நிலையில் ‘புஷ்பா 2’ படத்துக்கு ஓடிடி செயற்கை கோள் உரிமங்கள் மூலம் ரூ.250 கோடி வசூல் கிடைத்துள்ளதை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உறுதி செய்துள்ளார்.
இந்தப்படம் தெலுங்கில் மட்டும் அல்லாமல் பல்வேறு மொழிகளில் வெளியாகி புதிய சாதனை படைக்கும் என்றும் ஞானவேல்ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

