தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காவல்துறை அதிகாரியாக பிரபாஸ்

1 mins read
3e3caa16-2ceb-4195-8f67-47fd630bd3df
பிரபாஸ். - படம்: ஊடகம்

‘கல்கி 2989’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து, நடிகர் பிரபாஸ் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளார்.

‘அர்ஜூன் ரெட்டி’, ’அனிமல்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி, அடுத்து இயக்கும் படத்தில் பிரபாஸ்தான் நாயகன். இந்தப் படத்துக்கு ‘ஸ்பிரிட்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அதிரடி சண்டைக்காட்சிகளுடன் தயாராகும் இப்படத்தில், பிரபாஸ் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இது அவரது 25வது படம் என்றும் ரூ.100 கோடி செலவில் உருவாகிறது என்றும் கூறப்படுகிறது.

இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்