தனுஷ் இயக்கியுள்ள ‘ராயன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 16ஆம் தேதி இப்படத்தின் முன்னோட்டக் காட்சி தொகுப்பை வெளியிடுகின்றனர். இது தனுஷ் நடிப்பில் உருவாகும் 50வது படம்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், செல்வராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இது வடசென்னை பின்னணியில் நடக்கும், குண்டர்களுக்கு இடையேயான மோதலைச் சித்திரிக்கும் அடிதடிப் படமாக உருவாகி உள்ளதாகத் தகவல்.
இப்படம் எதிர்வரும் 26ஆம் தேதி வெளியாக உள்ளது.