தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘கைதி-2’ அடுத்த ஆண்டு வெளியாகும் எனத் தகவல்

1 mins read
53a2cbfa-7d70-4edb-a61d-3fcd4cfcb545
கார்த்தி. - படம்: ஊடகம்

ரஜினியின் ‘கூலி’ படத்தை முடித்த கையோடு, ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

கடந்த 2019ஆம் ஆண்டு கார்த்தி நாயகனாக நடித்த ‘கைதி’ படம் வெளியானது.

‘கைதி’ திரைப் படம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என அறிவித்திருந்தனர்.

எனினும், வேறு சில பெரிய படங்களை இயக்குவதில் லோகேஷ் கவனம் செலுத்தியதால் ‘கைதி 2’ படம் உருவாவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், எதிர்வரும் 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் ‘கைதி’ இரண்டாம் பாகம் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தரப்பு கூறி வருகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்