பார்த்திபன் இயக்கியுள்ள ‘டீன்ஸ்’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகி பரவலாகப் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில், சமூக ஊடகத்தில் இது குறித்து அவர் பதிவிட்டுள்ளார்.
“குழந்தைகள், குடும்பங்களிடம் இருந்து உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றால் நான் மிகவும் நேசித்த, உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டுவிலகி கண்காணாத இடத்துக்குச் சென்றுவிட முடிவெடுத்தேன்.
“இப்போது நீங்கள் அனைவரும் ஒருமுகமாக கொடுக்கும் பாராட்டுகளால் நான் ‘ஓ’ என்று மகிழ்ச்சியில் அழுவதை நீங்கள் கேட்க வாய்ப்பே இல்லை,” என்று பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.
“அடுத்த தலைமுறை ரசிக்கும் வகையிலும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு அறிவியல்பூர்வமான படத்தை எடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் இந்தப்படம் உருவானது.
“இப்படத்தை பள்ளிகளும் கல்லூரிகளும் இல்லங்களும் கொண்டாட வேண்டும்,” என்றும் பார்த்திபன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.