திருமணத்துக்குப் பிறகு திரையுலகை விட்டு தாம் விலகப்போவதாக வெளியான தகவல் உண்மை அல்ல என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.
சினிமா துறைதான் தமது உயிர் என்றும் தொடர்ந்து நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்க உள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

