தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘மூக்குத்தி அம்மன் 2’ மர்மம்

2 mins read
1b021dde-7421-4769-86ba-1813ddadbd25
‘மூக்குத்தி அம்மன்’ முதல் பாகத்தில் நடித்த நயன்தாரா. - படம்: தமிழக ஊடகம்

ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி மற்றும் பலர் நடிப்பில் 2020ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படம் ‘மூக்குத்தி அம்மன்’. இதனை ஆர்ஜே பாலாஜி, என்ஜே சரவணன் இயக்கியிருந்தனர்.

பக்தி கலந்த நகைச்சுவைப் படமாக இருந்த இந்தப் படத்தை ரசிகர்கள் வரவேற்று ரசித்தனர். கொவிட்-19 கொள்ளைநோயால் திரையரங்குகளில் படம் வெளியாகவில்லை.

இந்நிலையில் ‘மூக்குத்தி அம்மன் 2’ என இதன் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு ஒன்றை படத் தயாரிப்பு நிறுவனம் கடந்த வாரம் சிறு காணொளி ஒன்றின் மூலம் அதிகாரபூர்வமாக வெளியிட்டது.

முதல் பாகத்தின் போஸ்டர், டைட்டில் கிராபிக்ஸ் ஆகியவற்றுடன் கூடுதலாக ‘2’ என்பதை மட்டும் சேர்த்து எளிமையாக அந்தக் காணொளி வெளியானது.

நயன்தாரா நடிப்பார் என்பது மட்டும்தான் அந்த அறிவிப்பில் இருந்தது. படத்தின் இயக்குநர் யார், இசையமைப்பாளர் யார், மற்ற நடிகர்கள் யார் போன்ற விவரங்கள் இல்லை.

இது குறித்து கோலிவுட்டில் விசாரித்தபோது படத்தின் இயக்குநர் யார் என்றெல்லாம் இதுவரை முடிவு செய்யப்படவில்லை. ‘மூக்குத்தி அம்மன்’ முதல் பாகத்தை இணைந்து இயக்கிய ஆர்ஜே பாலாஜி ‘மாசாணி அம்மன்’ என்ற படத்தை இயக்க உள்ளார்.

அதற்குப் போட்டியாக அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றுதான் ‘மூக்குத்தி அம்மன் 2’ காணொளியை வெளியிட்டுள்ளார்களாம்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் செல்லப் பிள்ளையாக இருந்த ஆர்ஜே பாலாஜிக்கும், நிறுவனத்திற்கும் இடையில் என்ன நடந்தது என்பது பற்றித் தெரியவில்லை என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
மூக்குத்திநயன்தாராதிரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்