சரத்குமார், தேவயானி மீண்டும் இணைகின்றனர்

சரத்குமார், தேவயானி மீண்டும் இணைகின்றனர்

படம்: தமிழக ஊடகம்

16 Jul 2024 - 7:50 pm

1 mins read

கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான ‘சூர்யவம்சம்’ படத்தில் சரத்குமாரும் தேவயானியும் இணைந்து நடித்திருந்தனர்.

இந்தப் படத்தை விக்ரமன் இயக்கி இருந்தார். படமும் பெரிய அளவில் வெற்றிபெற்றது.

தற்போது 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கின்றனர் என்று கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் சித்தார்த் நாயகனாக நடிக்கிறார். இது அவருக்கு 40வது படமாகும். இதில் நாயகிகளாக மீதா ரகுநாத், சைத்ரா அச்சார் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்
சரத்குமார்திரைச்செய்திசினிமா

தொடர்புடைய செய்திகள்