விடுதலை - 2 முதல் தோற்றப் போஸ்டர்

விடுதலை - 2 முதல் தோற்றப் போஸ்டர்

1 mins read
e52e7306-5ecb-46f9-9dbc-22e71a15f2bd
விடுதலை-2 தோற்றச் சுவரொட்டி - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

விடுதலை-2 படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி ஜூலை 17 காலை 11.30 மணிக்கு வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பிரதான பாகத்தில் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்திலும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதில், நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இப்பாகத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாகவும் இருவருக்குமான காட்சிகள் 1960களில் நடப்பது போன்று காட்சிப்படுத்தப்பட உள்ளதால் இருவரின் தோற்றத்தையும் இளமையாகக் காட்ட நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், நடிகர் எஸ்.ஜே. சூர்யா விடுதலை-2 பாகத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்