நடிகை சாய் பல்லவி 6 முறை ‘ஃபிலிம்ஃபேர்’ விருது வென்று சாதனை படைத்துள்ளார்.
இதுவரை ஐந்து ‘ஃபிலிம் ஃபேர்’ விருதுகளைப் பெற்றுள்ள நயன்தாராவை அவர் முந்தி உள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான ‘பிரேமம்’ மூலம் திரையுலகில் அறிமுகமான சாய் பல்லவி, அப்படத்தில் ஆசிரியை பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தார். அவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருது கிடைத்தது.
அதையடுத்து, ‘பிடா’, ‘லவ் ஸ்டோரி’, ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘கார்கி’ ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக அவர் விருதுகளை வென்றார். இதன் மூலம் நயன்தாராவை முந்தியுள்ளார் சாய் பல்லவி.
இதுவரை நயன்தாரா பதினான்கு முறை ஃபிலிம் ஃபேர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட நிலையில், ஐந்து முறை விருதுகளை வென்றார்.
நடிகை திரிஷாவும் இந்த விருதை ஐந்து முறை வென்றவர்.
ஆனால் சாய் பல்லவி பத்து முறை விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு ஆறு முறை வென்றுள்ளார்.

