தனது கணவர், பிள்ளைகளுடன் நடிகர் விஜய்யை நடிகை ரம்பா சந்தித்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
நடிகை ரம்பா கடந்த 2010ல் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இணையத்தில் பகிரப்படும் படங்களால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள், ‘மின்சார கண்ணா’ படத்தில் இடம்பெற்ற ‘ஊதா ஊதா ஊதாப்பூ’ பாடல்தான் உங்கள் இருவரையும் பார்த்தவுடன் ஞாபகத்துக்கு வருகிறது’ என்று பதிவிட்டுள்ளனர்.
நடிகை ரம்பா தனது பதிவில், “பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி” என்றும் “நீங்கள் மிகச் சிறந்தவர்” என்றும் பதிவிட்டுள்ளார். இதற்கு ஏராளமானோரின் ‘லைக்ஸ்’ குவிந்து வருகிறது.
விஜய், ரம்பா இருவரும் ‘மின்சார கண்ணா’, ‘என்றென்றும் காதல்’, ‘நினைத்தேன் வந்தாய்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.

