நடிகை ரகுல் பிரீத் சிங் அண்மையில்தான் பாலிவுட் தயாரிப்பாளரான ஜாக்கி பாக்னானியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களது திருமணம் முடிந்து ஒருசில நாள்களிலேயே பெரும் நிதிச்சிக்கலுக்குள் தம்பதியர் மாட்டிக்கொண்டு தவிப்பதாகக் கூறப்படுகிறது.
ரகுல் பிரீத் சிங்கின் கணவர் ஜாக்கி பாக்னானியும் அவரது தந்தை வாசு பாக்னானியும் இரண்டு அறைகள் கொண்ட வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதில் தங்களது அலுவலகத்தை நடத்தி வருவதாகவும் இதனால் ரகுல் பிரீத் சிங் பெரும் மன அழுத்தத்தில் உள்ளதாகவும் கோலிவுட் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
ரகுல் பிரீத் சிங்கின் மாமனார் வாசு பாக்னானியும் பாலிவுட்டின் பெரும் தயாரிப்பாளர்களில் ஒருவராக உள்ளார்.
இவரது ‘பூஜா என்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் வரவு செலவுத் திட்டத்தில் ஏகப்பட்ட படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் வாசு பாக்னானி தயாரித்த ‘கணபத்’, ‘படே மியான் சோட்டே மியான்’, ‘பெல் பாட்டம்’ உள்ளிட்ட எந்தப் படமும் ஓடவில்லை. அதேபோல் வசூலும் அதிகமில்லை.
அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப் நடித்திருந்த ‘படே மியான் சோட்டே மியான்’ ரூ.300 கோடி செலவில் எடுக்கப்பட்டு, வெறும் ரூ.60 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது. இதனால் ஒரே படத்தின் மூலம் ரூ.240 கோடி நஷ்டம் என்கிறார்கள்.
படத்தில் வேலை பார்த்த தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட பலருக்கும் இன்னும் சம்பளம் பாக்கி உள்ளதால், சமூக ஊடகங்களில் ‘எங்களுக்கு சம்பளம் தரவில்லை’ என்று அவரவர்களும் தங்களது வலியைப் பதிவு செய்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், மற்ற தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து வாசு பாக்னானி தயாரித்த படங்களும் பாக்ஸ் ஆபீஸில் காலை வாரிவிட்டதால் பெரும் நிதிச் சிக்கலில் அல்லாடி வருகிறார்கள் ரகுலின் கணவரும் மாமனாரும்.
கடன் பிரச்சினையில் இருந்து தப்பிக்க மும்பையில் ஏறக்குறைய ரூ.250 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது அலுவலகத்தை இப்பொழுது வாசு பாக்னானி விற்றுவிட்டாராம்.
இதையடுத்து, ஈரறை வாடகை வீட்டில் தனது மகன், மருமகளுடன் சேர்ந்து வசித்து வருகிறார் வாசு பக்னானி. ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டாரே ரகுல் பிரீத் சிங் என வருத்தத்துடன் பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.