விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘டிரெயின்’ என்ற படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் ஷ்ருதி ஹாசன்.
தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை மிஷ்கின் இயக்குகிறார்.
ஜெயராம், நாசர், டிம்பிள் ஹயாத்தி ஆகியோரும் உள்ளனர். படப்பிடிப்பைத் தொடங்கும் முன்பு ரயிலைப் போன்ற ஓர் அரங்கை அமைத்து அனைத்து காட்சிகளுக்கும் ஒத்திகை பார்த்துள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு ரயிலில் நிகழும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி உள்ளதாக மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
இப்படத்துக்கு இசையமைப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளார் மிஷ்கின்.
இந்நிலையில், தனது இசையில் பாட ஷ்ருதிஹாசனுக்கு அவர் ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளார்.
இந்தப் பாடல் இளையர்களைக் கவரும் வகையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
அண்மைக்காலமாக செய்தியாளர்களை சந்திக்கத் தயங்குகிறார் ஷ்ருதி. ஒருவேளை பங்கேற்றாலும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவதை தவிர்க்கிறார். சமூக ஊடகங்களிலும் இந்தக் கொள்கையைத்தான் கடைப்பிடிக்கிறாராம்.
தொடர்புடைய செய்திகள்
இசைத்துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஷ்ருதி.
விரைவில் வெளிநாடுகளுக்குச் சென்று சில இசைத் தொகுப்புகளை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளாராம்.