மடிப்பிச்சை கேட்கிறேன்: வறுமையில் வாடும் நகைச்சுவை நடிகை வாசுகி

மடிப்பிச்சை கேட்கிறேன்: வறுமையில் வாடும் நகைச்சுவை நடிகை வாசுகி

1 mins read
f7b2350d-cfb4-4490-949d-7684c46daeb9
வாசுகி. - படம்: ஊடகம்

நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்த மூத்த நடிகை வாசுகி தாம் வறுமையில் வாடுவதாகவும் உணவுக்கே வழியின்றி தவிப்பதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு கவுண்டமணி, செந்தில் நடித்த பல்வேறு படங்களில் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார் வாசுகி. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளராகவும் இருந்து வந்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவையடுத்து கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு, திரைப்பட வாய்ப்புகளும் இல்லாமல் சிரமப்பட்டதாகவும் சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்றுவிட்டதாகவும் வாசுகி கூறுகிறார்.

“உணவுக்கே வழி இல்லாத சூழல் ஏற்பட்டபோது கைவசம் இருந்த நகைகளை விற்று காலத்தை ஓட்டினேன். தெலுங்கு நடிகர் சங்கம் ஓரளவு உதவி செய்தது.

“நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு அந்த சங்கத்தில் என்னை உறுப்பினராக்க அவரே பணம் செலுத்தினார். சிரஞ்சீவி உள்ளிட்டோர் பணம் கொடுத்து உதவினர். தென்னிந்திய நடிகர் சங்கம் இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை.

“கண்ணில் அறுவை சிகிச்சை செய்ததற்கு நிறைய பணம் செலவானது. தங்கு வதற்கு இடமும் வேலையும் கொடுத்தால் பிழைத்துக்கொள்வேன்,” என்று சொல்லும் வாசுகி, நடிகர் சங்க நிர்வாகி களான நாசர், விஷால் உள்ளிட்டோர் தனக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

“இப்போது சாலைகளில் சுற்றித்திரிகிறேன். ஏதேனும் உதவி செய்யுங்கள் என மடிப்பிச்சைக் கேட்கிறேன்,” என்று கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளார் வாசுகி.

குறிப்புச் சொற்கள்