தமன்னா நடனம் இருந்தால் போதும்; பார்த்திபன் கருத்துக்கு எதிர்ப்பு

1 mins read
bac114d1-c6c7-4c59-aedb-a371a6184567
தமன்னா. - படம்: ஊடகம்

“ஒரு படத்தின் வெற்றிக்கு இனி நல்ல கதை தேவையில்லை. தமன்னாவைப் போன்ற நடிகையை ஒரு பாடலுக்கு ஆட வைத்தால் படம் வெற்றி பெற்றுவிடும்,” என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்த கருத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அவர் ரஜினியை மறைமுகமாகப் பேசுவதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். அண்மைய பேட்டி ஒன்றில் பார்த்திபன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா ஒற்றைப் பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

அந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், பார்த்திபன் இவ்வாறு பேசியுள்ளார். அண்மையில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை 4’ படத்திலும் நடிகை ராஷி கன்னாவுடன் ஒரு பாடலுக்கு இணைந்து நடனமாடி இருந்தார் தமன்னா.

குறிப்புச் சொற்கள்