ஒரே நாளில் வெளியாகும் விக்ரம், பிரசாந்த் படங்கள்

1 mins read
26cbce67-d262-426d-992a-dc2c9814278f
விக்ரம், பிரசாந்த். - படம்: ஊடகம்

விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியீடு காண உள்ளது. இதே தேதியில்தான் பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ படமும் வெளியீடு காண உள்ளது.

’தங்கலான்’ படத்தை பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். இந்தப் படம் ஏற்கெனவே வெளியீடு காண இருந்த நிலையில், சில காரணங்களால் அது தள்ளிப்போனது. இப்படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதற்கிடையே, நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் அவரது மகன் பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ படம் வெளியாகிறது. நீண்டகால தயாரிப்பில் இருந்த இப்படத்தில், நடிகை பிரியா ஆனந்த் நாயகியாக நடித்துள்ளார். சிம்ரன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

அண்மையில் ‘அந்தகன்’ படம் முன்னோட்டக்காட்சித் தொகுப்புக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தப் படமும் திரை காண்கிறது.

குறிப்புச் சொற்கள்