இளமைத் தோற்றத்தில் அஜித்; ரசிகர்கள் உற்சாகம்

1 mins read
7b74f1ea-f240-4d7d-a473-565353c94579
‘விடாமுயற்சி’ படத்தில் அஜித், திரிஷா. - படம்: ஊடகம்

‘விடாமுயற்சி’ படத்தின் புதிய சுவரொட்டி வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இப்படத்தின் மூன்று சுவரொட்டிகள் இதுவரை வெளியாகி உள்ளன.

இரண்டு சுவரொட்டிகளில் அஜித் தலையில் நரைமுடியுடன் காணப்பட்டார்.

தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது சுவரொட்டியில் இளமைத் தோற்றத்துடன் அஜித் காணப்படுவது ரசிகர்களை மீண்டும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்