நடிகர் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி, அவர் நடித்து வரும் ‘கங்குவா’ படத்தின் முதல் பாடலை வெளியிட உள்ளனர்.
எதிர்வரும் அக்டோபர் 10ஆம் தேதி இந்தப்படம் திரைகாண உள்ளது. சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் உருவாகி உள்ளன.
இந்நிலையில், வரும் 23ஆம் தேதி சூர்யா தனது 49வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
‘கங்குவா’ படத்தில் இடம்பெறும் ‘ஃபயர் சாங்’ எனத் தொடங்கும் பாடலை வெளியிட உள்ளதாக அப்படக்குழு அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

