‘ஹிப்ஹாப்’ ஆதி நடித்துள்ள ‘கடைசி உலகப்போர்’ படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியாகி உள்ளது.
இது போர் சம்பந்தப்பட்ட கதைக்களத்தில் உருவாகும் படம். இப்படத்தை தானே தயாரித்து இயக்குவதுடன் இசையமைக்கவும் செய்கிறார் ஆதி.
இந்நிலையில், இப்படத்தின் முதல் சுவரொட்டி சமூக வளைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இச்சுவரொட்டியில் முகத்தில் ரத்தம் வழிய காட்சி அளிக்கிறார் ஆதி.
நண்பர்களுடன் இணைந்துதான் இப்படத்தை இயக்கி உள்ளதாகவும் ரசிகர்கள் தமக்கு உரிய ஆதரவை வழங்க வேண்டும் என்றும் ஆதி கேட்டுக்கொண்டுள்ளார்.