படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சிம்பு

படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சிம்பு

1 mins read
39af8ff7-ff43-4ec3-b52a-e7421f462aa7
சிம்பு. - படம்: ஊடகம்

நடிகர் சிம்பு படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்க உள்ளார்.

அவரது நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.

எனினும் சில பிரச்சினைகளால் இப்படத்தின் தயாரிப்பு அடுத்தக் கட்டத்துக்கு நகரவில்லை. இந்நிலையில் இப்படத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது ராஜ்கமல் நிறுவனம்.

இதனால் வருத்தமடைந்த சிம்பு ‘ஆத்மேன் சிலம்பரசன்’ எனும் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

ராஜ்கமல் நிறுவனம் கைவிட்ட படத்தை தனது சொந்த நிறுவனம் மூலம் ரூ.200 கோடி செலவில் சிம்பு தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்