தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘வணங்கான்’ தலைப்புக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

1 mins read
6438942c-3aa7-42c8-a8af-1788a88644f7
அருண் விஜய். - படம்: ஊடகம்

‘வணங்கான்’ படத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இந்நிலையில், ‘வணங்கான்’ என்ற தலைப்பை பாலாவும் சுரேஷ் காமாட்சியும் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எஸ்.சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த பின்னர், மனுதாரரின் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

குறிப்புச் சொற்கள்