பிரம்மாண்டமான திரையரங்கைக் கட்டும் இளைய தளபதி விஜய்

பிரம்மாண்டமான திரையரங்கைக் கட்டும் இளைய தளபதி விஜய்

1 mins read
e2ef4a6a-db9e-454a-b800-b0f84b8edf91
கோப்புப் படம் - ஊடகம்

தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் இளைய தளபதி நடிகர் விஜய், பிரம்மாண்டமான திரையரங்கை கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளார் என்ற செய்தி ஏற்கெனவே வெளிவந்தது.

எனினும், எந்த இடத்தில் அவர் திரையரங்கைக் கட்டப்போகிறார் என்ற தகவல் வெளிவராத நிலையில், இப்போது அதுகுறித்த ரகசிய முடிச்சு அவிழ்ந்துள்ளது.

பாண்டிச்சேரியில் புஸ்ஸி ஆனந்தின் வழிகாட்டுதலின்படி திரையரங்கை நடிகர் விஜய் கட்டவுள்ளதாகக் கூறுகின்றனர்.

அரசியலிலும் கால்பதித்துள்ள விஜய், தளபதி 69 படத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரையிடப்பட உள்ளது. ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்