தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலிவுட் திரையுலகில் சம்பளத்தில் உச்சம் தொட்டுள்ள நடிகைகள்

1 mins read
33651e78-cac3-47d7-b8a3-4283ea9ecb47
பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், கரீனா கபூர், அலியா பட். - படம்: ஊடகம்

பாலிவுட் நடிகைகளில் ஒரு சிலர் தங்களது நடிப்புக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதாகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்தியாவில் இந்திப் படங்கள்தான் அதிகளவிலான திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன.

பொதுவாக பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மாலிவுட் என எந்தத் திரையுலகாக இருந்தாலும் நடிகர், நடிகைகளுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளதால், இந்த ஊதிய ஏற்றத்தாழ்வு என்பது தற்போதுவரை பேசுபொருளாகவே இருந்து வருகிறது.

எனினும், பாலிவுட் திரையுலகில் ஒரு சில நடிகைகளின் சம்பளம் உச்சம் தொட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தீபிகா படுகோன் ஒரு படத்திற்கு ரூ.15 முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இரண்டாவது இடத்தில் உள்ள நடிகை ஆலியா பட் ஒரு படத்திற்கு ரூ.15 கோடிவரை சம்பளம் பெறுகிறார்.

மூன்றாவது இடத்தில் உள்ள கரீனா கபூர் ஒரு படத்திற்கு ரூ.8 முதல் 11 கோடி சம்பளம் வாங்குகிறார். 4வது, 5வது இடத்தில் நடிகை கத்ரீனா கைப், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் உள்ளனர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக உள்ள நடிகைகள் கங்கணா ரனாவத், கிருத்தி சனோன், கியாரா அத்வானி, டாப்சி ஆகியோர் ரூ. 5 முதல் ரூ.8 கோடி வரை சம்பளம் வாங்குவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்