தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசமான அனுபவத்தில் இருந்து முன்னணி நடிகையாகியுள்ளேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்

2 mins read
c8c8a5f7-55f2-4d20-801c-f9c34986590e
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். - படம்: ஊடகம்

பொதுவாக கறுப்பு நிறத்தில் இருக்கும் பெண்கள் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக நிலைத்திருப்பது என்பது சாதாரண விஷயமல்ல.

அதிலும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இப்படி ஒரு இடத்தைப் பிடிப்பது என்பது சில நடிகைகளுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.

அந்த சில நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர்.

அண்மைய பேட்டியில் ஐஸ்வர்யா ராஜேஷ், பல விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்.

“சினிமாவில் எனக்கு மோசமான அனுபவங்கள் பல ஏற்பட்டு உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இயக்குநர் என்னைப் படத்தில் நடிக்கவைப்பதாகக் கூறி ஒத்திகை பயிற்சிக்கு வரச் சொன்னார். நானும் சென்றிருந்தேன்.

என்னைப் பார்த்தவுடன் “இந்தப் பெண் ஜூனியர் கலைஞராகக்கூட நடிக்க முடியாது. அவரைத் திருப்பி அனுப்பிவிடுங்கள்,” என்று அந்த இயக்குநர் கூறினார்.

இதைக் கேட்டு எனது மனம் வலித்தது. ஆனால் அவரது வார்த்தைகளை ஒரு ஊக்கமாக எடுத்துக் கொண்டேன். போராடி ஜெயிக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன்.

அப்படிப்பட்ட நான்தான் இப்பொழுது தமிழ்ச் சினிமாவின் முன்னணி நடிகையாகி இருக்கிறேன்.

அதேபோல் மற்றொரு இயக்குநர் ஒருவரைச் சந்தித்தபோது, “திரைப்படம் ஒன்றில் எனக்கு ஒரு பாத்திரம் தருவதாகக் கூறினார். ஆனால் அது ரொம்பவே மோசமான கதாபாத்திரமாக இருந்தது. அவர்களின் எண்ணம் என்னவென்று அப்பொழுது எனக்குத் தெரியவில்லை.

“ஆனாலும், இதுபோன்ற அவமானங்களைக் கடந்துதான் வெற்றிபெற்றிருக்கிறேன். இன்று ரசிகர்கள் அவர்களில் ஒருவராக என்னையும் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்