அண்மையில், பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான ’போட்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இந்த சந்திப்புக்கு யோகி பாபு மிகவும் தாமதமாக வந்ததை அடுத்து செய்தியாளர்கள் மணி கணக்கில் காத்திருந்தனர்.
தான் வேறு ஒரு படத்தில் நடித்துவிட்டு வருவதால் தாமதம் ஏற்பட்டுவிட்டது எனத் தெரிவித்து செய்தியாளர்களிடம் யோகி பாபு மன்னிப்பு கேட்டார்.
இருப்பினும் செய்தியாளர் ஒருவர் யோகி பாபுவை விடாமல் காலம் தாழ்த்தி வந்ததற்காக கேள்வி கேட்டுகொண்டே இருந்தார். வேண்டுமென்றே யோகி பாபு அவர்கள் தாமதமாக வரவில்லை, எதிர்பாராத விதமாக தாமதம் ஆகிவிட்டது என்று யோகி பாபுவின் மக்கள் தொடர்பு அலுவலர் விளக்கமளித்தார்.
இதனையடுத்தும் யோகி பாபுவிடம் அந்த செய்தியாளர் மீண்டும் கேள்வி கேட்டார். அதற்கு, “ஒளிவாங்கியை அணைத்துவிட்டு வா பேசிக்கலாம்” என்று யோகி பாபு சொடக்கு போட்டு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான காணொளி இணையத்தில் பரவலாகி வருகிறது.

