சூரி நடித்துள்ள ’கொட்டுக்காளி’ திரைப்படத்தில் இசையமைப்பாளரே இல்லை என்று அந்த படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.
இந்த படம் முழுவதும் நேரடி ஒலியை வைத்து எடுத்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். ’கொட்டுக்காளி’ என்பது தென் தமிழகத்தில் உள்ள மண் சார்ந்த ஒரு வார்த்தை என்றும் இந்த கதையில் சேவல் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வரும் என்றார் அவர்.
இசையமைப்பாளரே இல்லாமல் நேரடி ஒலியை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ’கொட்டுக்காளி’ படம் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு மிகச் சிறந்த அனுபவத்தை வழங்கும் எனத் தான் எண்ணுவதாகவும் அவர் சொன்னார்.