தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருந்து வந்த சமந்தாவும் தமன்னாவும் இப்போது ஒரு பாடலுக்கு நடனமாட அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
‘புஷ்பா’ படத்தில் சமந்தா நடனமாடிய ‘ஊ சொல்றியா’ பாடலுக்கு ரூ.5 கோடி சம்பளம் பெற்றிருந்தார் சமந்தா. இது முன்னணி நடிகைகள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை விட அதிகம்.
இதைத்தொடர்ந்து, சமந்தாவை பலரும் அணுக முயன்றாலும் உடல்நலப் பாதிப்பு காரணமாக அவர் விலகியிருந்த நேரத்தில், ‘ஜெயிலர்’ படத்தின் காவாலா பாடல் மூலம் தமன்னா மிகவும் பிரபலமானார்.
அந்தப் பாடலின் வெற்றிக்குப் பிறகு தமன்னாவை சிறப்பு நடனத்திற்காக பலரும் அழைத்து வருகின்றனராம்.
அண்மையில், தமன்னா நடனத்தில் வெளியான ‘ஆஜ் கி ராத்’ பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் பாடலுக்கு மட்டும் தமன்னா ரூ.3 கோடி சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இவர்களுக்கு அடுத்தபடியாக நோரா பதேகி ரூ.2 கோடியும் கரீனா ரூ.1.5 கோடியும் வாங்குகின்றனர். மேலும், கத்ரினா மற்றும் மலைகா அரோரா ஒரு பாடலுக்கு நடனமாட ரூ.50 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்கள்.

