ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த நாகார்ஜுனா

1 mins read
73d5863e-8211-4e88-96a3-fbbb26959c64
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, ரஜினி. - படம்: ஊடகம்

ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் வில்லனாக நடிக்க நாகார்ஜுனாவும் மறுத்துவிட்டார்.

லோகேஷ் கனகராஜ் இதுவரை இயக்கிய படங்களிலேயே ‘லியோ’ படம்தான் மோசமான விமர்சனங்களை பெற்றது. அதன் காரணமாக ரஜினிகாந்த்தை வைத்து இயக்கும் ‘கூலி’ படத்தை அவர் முக்கியமான படமாகவே பார்க்கிறார்.

இந்தப் படத்தை வைத்து லியோவில் தன்னை விமர்சித்தவர்களுக்கு தரமான பதில் சொல்லும் முனைப்பில் உழைத்து வருகிறார். படத்தின் தலைப்பும் காணொளியும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதற்கிடையே இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க முதலில் ஷாருக்கான், ரன்வீர் சிங் உள்ளிட்டோரிடம் லோகேஷ் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். அவர்கள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றும் சொல்லப்பட்டது.

அதனையடுத்து நாகார்ஜுனாவிடம் பேசியதாகவும் ‘கூலி’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நாகார்ஜுனாவும் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக யாரை வில்லனாக போடலாம் என்ற என்ற தேடலில் இருக்கிறார் லோகேஷ்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாஉலகம்