அசோக் செல்வனை மேடையில் வசைபாடிய தயாரிப்பாளருக்கு பதிலடி கொடுத்து இருக்கின்றனர் அவரது நலம் விரும்பிகள்.
அசோக் செல்வன் நடிப்பில் ‘எமக்குத் தொழில் ரொமன்ஸ்’ என்ற படம் வெளியாக இருக்கிறது. அந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு அசோக் செல்வன் பங்கேற்காததால் படத்தின் தயாரிப்பாளர் திருமலை மேடையில் அசோக் செல்வனை திட்டியதாகக் கூறப்படுகிறது.
அதற்குத் தயாரிப்பு தரப்பு பேசிய தொகையை அசோக் செல்வனுக்கு கொடுத்து இருந்தால் அடுத்தடுத்த வேலைகளுக்கு அவரே வந்திருப்பார். இதுவரை அசோக் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழாத நிலையில், தற்போது ஏற்படுகிறது என்றால் அவர் தரப்பு நியாயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் அவரது நலம் விரும்பிகள்.

