தனுஷின் ‘ராயன்’ படம் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்று பதிவிட்டு இருக்கிறார் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு.
தனுஷின் 50வது படமாக கடந்த வாரம் வெளியான படம் ‘ராயன்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. தெலுங்கிலும் மறுபதிப்பு செய்யப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தைப் பற்றி தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபு, “ராயன், தனுஷ் அற்புதமாக இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ் மற்ற நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மேஸ்ட்ரோ ரஹ்மான் சிறப்பானதொரு பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார். கட்டாயம் பார்க்க வேண்டிய படம்,” என்று பாராட்டியுள்ளார்.
அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த ‘ராயன்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், அல்லு அர்ஜுன் ஆகியோரில் யாருடன் சேர்ந்து தெலுங்கு படத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என தனுஷிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஜூனியர் என்.டி. ஆர் என பதில் அளித்திருந்தார்.
தன்னுடன் நடிக்க விருப்பம் தெரிவிக்காவிட்டாலும் தனுஷின் படம் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பது அவரின் உயர்ந்த குணத்தைக் காட்டுகிறது என்று கூறுகிறது கோடம்பாக்கம்.

