திரைச்செய்தி

திரைச்செய்தி

2 mins read
795e8309-53ef-4953-ac92-0707ddc0409a
படம் - படம்

பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படம் 300 கோடி ரூபாய் செலவில் தயாராகிறது. இப்படத்தில் பிரபாஸ் காவல் அதிகாரியாகவும் வில்லனாகவும் இரட்டை வேடத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. ஒரு வேடத்தில் பிரபாஸ் நடித்தாலே அதன் வியாபாரம் ரூ.1,000 கோடியைத் தொடும். இந்நிலையில் இவர் இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கும் படத்திற்கு எப்படியும் ரூ.2,000 கோடி ரூபாய் வசூலாகும் என்கின்றனர்.

வித்தியாசமாக பிறந்தநாள் கொண்டாடிய ரசிகர்

நேற்று நடிகர் சோனுசூட்டின் 51 ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வித்தியாசமாகக் கொண்டாடி வருகின்றனர். சோனுசூட்டின் ரசிகர்களில் ஒருவரான புருஷோத்தம், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் ஹாக்கிங்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். கொரோனா நேரத்தில் பல உதவிகள் செய்த தன் பள்ளியின் 1,200 மாணவர்களை சோனுசூட்டின்புருவத்தில் அமர வைத்து அவர்களை வைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் அந்த பள்ளியின் ஆசிரியர். அந்தப் படம் வலைத்தளங்களில் விரைவாகப் பரவி வருகிறது. மேலும் அவரால் உதவி பெற்ற பலர் அவருக்கு வித்தியாசமான வகைகளில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

‘அசோக் செல்வன் மீது தவறில்லை’

அசோக் செல்வன் நடிப்பில் ‘எமக்குத் தொழில் ரொமன்ஸ்’ என்ற படம் வெளியாக இருக்கிறது. அந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு அசோக் செல்வன் பங்கேற்காததால் படத்தின் தயாரிப்பாளர் திருமலை மேடையில் அசோக் செல்வனை திட்டியதாகக் கூறப்படுகிறது. அதற்குத் தயாரிப்பு தரப்பு பேசிய தொகையை அசோக் செல்வனுக்கு கொடுத்து இருந்தால் அடுத்தடுத்த வேலைகளுக்கு அவரே வந்திருப்பார். இதுவரை அசோக் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழாத நிலையில், தற்போது ஏற்படுகிறது என்றால் அவர் தரப்பு நியாயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் அவரது நலம் விரும்பிகள்.

குறிப்புச் சொற்கள்
சினிமாதிரைச்செய்திபிறந்தநாள்