வயநாடு நிலச்சரிவின் பெருந்துயரில் பங்கேற்கும் வகையில், நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி, நடிகர் சூர்யா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, 50 லட்சம் ரூபாயை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சியான் விக்ரமும் தனது பங்கிற்கு முதல் ஆளாக ரூ.20 லட்சம் நிதி உதவியைக் கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
கேரளா மாநிலத்தின் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டு, அதில் சிக்கி இதுவரை 280க்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். பலர் மண்ணோடு மண்ணாக புதைந்திருப்பதால் இந்தப் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றன.

