சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் வேட்டையன். ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் நடந்து முடிந்தது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்துள்ள மஞ்சு வாரியர் கேரளாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் அப்போது இப்படம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது.
அதற்கு இவர், “ நான் வேட்டையன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக நடிக்கின்றேன். எனக்கு முதலில் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கின்றார் எனத் தெரியாது. நான் ஜெய் பீம் என்ற தரமான படத்தினை எடுத்த ஞானவேல் சாரின் படம் என்பதால் இந்த படத்திற்கு ஒப்புக்கொண்டேன். எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜோடியாக நடிக்கிறேன் என்பதை விடவும் ஞானவேல் என்ற இயக்குநரின் படத்தில் நடிக்கின்றேன் என்ற பொறுப்பு மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது,” எனத் தெரிவித்தார்.

