பிரசாந்த் நடிப்பில் வெளிவரவுள்ள அந்தகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ப்ரியா ஆனந்த். அந்தகன் படம் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி வெளிவர உள்ள நிலையில், இந்த படத்தை விளம்பரப்படுத்துவதற்கானப் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
இதில் கலந்து கொண்ட ப்ரியா ஆனந்த் அவருக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு கன்னடத்தில் புனித் ராஜ்குமார் என்றும் தமிழில் மிர்ச்சி சிவா என்றும் கூறியிருக்கிறார். இவர் புனித் ராஜ்குமார் கடைசி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பணத்திற்காக வேறு வேலை எதுவும் செய்துள்ளீர்களா என்ற கேள்விக்கு, பணத்திற்காகவே ஒரு படத்தில் நடித்தேன் என கூறியுள்ளார். அந்த நேரத்தில் வீட்டுக்காகக் கடன் கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் கதை எதுவும் கேட்காமல் அந்த படத்தில் நடித்ததாக ப்ரியா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

